திருச்சியில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

திருச்சியில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்
X

திருச்சியில் நியாயவிலைக்கடையை அமைச்சர் நேரு திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி உறையூர் , பிராட்டியூர் மற்றும் ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக் கட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நியாயவிலைக் கடைக் கட்டடங்களைத் திறந்து வைத்து , குடும்ப அட்டைதார்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து உறையூர் கல்நாயக்கன் தெருவில் மாநகராட்சி பொதுநிதியில் ரூ. 3.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் குழாய் கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் . பின்னர் திருச்சி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து , மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் .

இந்நிகழ்வுகளில், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் விக்னேஷ்வர், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil