பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து என எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் சுமார் 94 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், வாழை, பருத்தி மற்றும் கரும்பு உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் பயிரிடப்படுகிறது. நெல் மற்றும் வாழை பயிர்கள் பொட்டாஷ் உரங்கள் இடும்பருவத்தில் உள்ளன. தற்போது புதிய பொட்டாஷ் உரம் மூட்டை விலைரூ.1,700 ஆகும். இந்த விலை ஏற்றம் கடந்த 8-ந் தேதிக்கு பின் புதியதாக வரப்பெற்ற பொட்டாஷ் உரத்திற்கு மட்டும் பொருந்தும்.
ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள ரூ.1,040 என்ற விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும். அவற்றை விவசாயிகளுக்கு உரிய விற்பனை செய்வதை உறுதி செய்திட மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு கண்காணிப்புக் குழுவின் ஆய்வின் போது கூடுதல் விலைக்கு பழைய பொட்டாஷ் உர மூட்டையினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உரவிற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu