திருச்சியில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ பரிசோதனை

திருச்சியில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ பரிசோதனை
X

திருச்சியில் போலீஸ் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திருச்சியில் போலீஸ் குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாமை டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

தனியார் மருத்துவமனை மூலம் நடந்த இந்த நீரழிவு சிறப்பு பரிசோதனை முகாமை திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் சரவண சுந்தர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் காவல்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு உயரம், எடை மற்றும் பருமனால் வரும் நோய்கள், காது பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண்களின் விழித்திரை பரிசோதனை, கால் ரத்த ஓட்டம் மற்றும் உணர்ச்சி பரிசோதனை, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!