அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது வழக்கு
X

திருச்சியில் முன்அனுமதி பெறாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்கு 

திருச்சி சிந்தாமணியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக கவர்னர் உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது ஊரடங்கு உத்தரவை மீறி, சட்டவிரோதமாக ஒன்று கூடி, எந்தவித முன் அனுமதியும் பெறாமல் கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததாக அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில துணை செயலாளர் தினேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித், மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்ளிட்ட 11 பெண்கள் உட்பட 40 பேர் மீது கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து உள்ளார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு