திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கலெக்டர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மே தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை மதுபான கடைகளும், அதனுடன் இயங்கும் மதுக் கூடங்களும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டல்களில் இயங்கிவரும் பார்களும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!