திருச்சியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில்மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சாமானிய மக்கள் நலக்கட்சியினர்.

திருச்சியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் நலகட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் சாமானிய மக்கள் நல கட்சி சார்பில் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட தமிழக ஆறுகளில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து, அந்த கோரிக்கையை வலியுறுத்தி பலவேறு கோஷமிட்டனர்.

இதில் நிர்வாகிகள் குமார், வழக்கறிஞர்கள் ராஜகுரு, வெற்றி, ரமேஷ், மலர்மன்னன், தர்மலிங்கம், காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு