சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
X
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் மனு கொடுக்க வந்தனர்.
திருச்சியில் சுகாரதார சீர்கேட்டை சரி செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமையில் நிர்வாகிகள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுகாதாரக்கேடு அதிக அளவில் உள்ளது.கழிவு நீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவுகள் சாலைகளில் தேங்கி நிற்கிறது.

ஓடத்துறை பாலம் கீழ் பகுதியில் குப்பை கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் அங்குள்ள பொது கழிவறையை பெண்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தக் கழிவறை முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. கதவுகள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் வசதி இல்லை. கழிவுநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. ஆதலால் இவை அனைத்தையும் உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story
ai marketing future