முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு
X
அமைச்சர் நேருவிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினார் இடிமுரசு இஸ்மாயில்.
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் ஆதரவு கடிதத்தை தி.மு.க. தலைவரிடம் வழங்கக் கோரி தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான நேருவிடம் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் அரியமங்கலம் ஜமாலுதீன், மாநில மாணவர் அணி தலைவர் ஆரிபுல்லா மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஷபிபுல்லா, தமிம் அன்சாரி ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!