கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
திருச்சியில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சூர்யா என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

திருச்சி , மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21–ந்தேதி ரிசாந்த் என்பவரை கொலை செய்ததாக சூர்யா (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

குற்றவாளி சூர்யா மீது 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தொடர்ந்து குற்றம் செய்யக்கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின்படி, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சூர்யா, குண்டர் தடுப்பு சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!