தி.மு.க. மூத்த நிர்வாகியை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. மூத்த நிர்வாகியை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்
X

திருச்சியில் தி.மு.க. முன்னோடி என்.செல்வேந்திரன் இல்லத்திற்கு சென்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது அருகில் அமர்ந்து உடல் நலம் விசாரித்தார்.

திருச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகியை சந்தித்து நலம் விசாரித்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஏரி, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் திருச்சி சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த மு.க. ஸ்டாலின் திருச்சி உறையூரில் உள்ள தி.மு.க.வின் மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு , பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture