சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பங்கேற்பு

சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பங்கேற்பு
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி பொன்மலையில் நடந்த சித்திரை தேர் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பங்கேற்றார்.

தி்ருச்சி பொன்மலை சீ டைப் பகுதியில் அமைந்துள்ள செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைத் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

சித்திரைத் தேரில் எழுந்தருளிய மாரியம்மன் தேரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் தர்மராஜ் ,வரதராஜன், முருகானந்தம் தவசீலன் ,செந்தில் மற்றும் கோயில் நிர்வாக கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி