திருச்சி மலைக்கோட்டை நாகநாதசுவாமி கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா
திருச்சி மலைக்கோட்டை மேற்கு புறத்தில் நந்தி கோவில் தெருவில், நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆனந்தவல்லி, நாகநாதசுவாமி மற்றும் சுப்பிரமணியர், துர்க்கை, குரு, நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளும் உள்ளன.
இந்த கோயிலில் மாசி மக திருவிழா கடந்த 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9-ஆம் தேதி முதல் சுவாமி, அம்பாள், கற்பக விருட்சம், காமதேனு வாகனத்திலும், 10-ந்தேதி பூதவாகனம், கமலவாகனம், 11-ந்தேதி கைலாசபர்வதம், அன்னவாகனம், 12-ந்தேதி 63 மூவர்கள் இடபவாகனத்தில் எழுந்தருளள், 13-ந்தேதி, யானை வாகனம், பூ பல்லக்கு வாகனம், 14-ந்தேதி, நந்தி வாகனம், சிம்மவாகனம், 15-ந்தேதி குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
இந்நிலையில் 16 -ஆம் தேதியான இன்று காலை சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்கள். பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் காலை ஆறு மணிக்கு நடைபெற வேண்டிய தேர்த்திருவிழா மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து மலைக்கோட்டையை சுற்றி வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu