மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
X

திருச்சி விமான நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். இரவில் அங்கு தங்கிய மு.க. ஸ்டாலின் 30ம் தேதி காலை தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் திருச்சி வருகிறார்.

நாளை மாலை திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.

விழா முடிந்த பின்னர் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!