காமராஜர் நினைவு நாள்; திருச்சியில் நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ் அஞ்சலி

காமராஜர் நினைவு நாள்; திருச்சியில் நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ் அஞ்சலி
X

நாடார் பேரவை தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்

காமராஜர் நினைவு நாளையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இந்திய நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ் அஞ்சலி செலுத்தினர்

பெருந்தலைவர் காமராஜர் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்.

அருகில் தலைமைச்செயலாளர் ஆழ்வார்த்தோப்பு ஜெயராஜ், பொதுச் செயலாளர் ராஜ்குமார், மற்றும் பலர் உள்ளனர்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டி சேகர், வட்ட செயலாளர்கள் சிவகுமார், பாறையடி சங்கர், சண்முகம் நிர்வாகிகள் மெக்கானிக் குமார், தர்கா முபாரக், சிந்தாமணி செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெருந்தலைவர் காமராஜரின் நாற்பத்து ஏழாவது நினைவு தினத்தையொட்டி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மேயர் சுஜாதா, பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், நிர்வாகிகள் சிவாஜி சண்முகம், அண்ணா சிலை விக்டர், சிவா, முரளிதரன், சார்லஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!