திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பம் வாங்க ஆர்வம்- வேட்புமனு தாக்கல் இல்லை

திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பம் வாங்க ஆர்வம்- வேட்புமனு தாக்கல் இல்லை
X

திருச்சியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் விண்ணப்ப படிவம் வாங்கி சென்றார்.

விண்ணப்ப படிவம் வாங்கி செல்ல ஆர்வம் இருந்தது. இன்று திருச்சி மாவட்டத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சியும், 5 நகராட்சிகளும், 14 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர் பதவியிடத்திற்கு இன்று 28-1-2022 முதல் வரும் 4-2-2022 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்.

இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் முதல் நாளான இன்று மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உட்பட எந்த பகுதியிலும் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.


ஆனால் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உட்பட சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் சென்று வேட்புமனுக்களை வாங்கி சென்றனர். அவர்களிடம் போலீசார் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களா? அல்லது சுயேட்சை வேட்பாளரா? என்று விவரங்களை கேட்டு வாங்கினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!