நாளை ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையில் திருச்சி கலெக்டர் ஆய்வு

நாளை ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையில் திருச்சி கலெக்டர் ஆய்வு
X
ஆடிப்பெருக்கையொட்டி திருச்சி காவிரி கரை அம்மா மண்டபத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார்.
நாளை ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

ஆடிப்பெருக்கு தினத்தன்று திருச்சி காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் குறிப்பாக புதுமண தம்பதிகள் அதிக அளவில் கூடி காவிரி தாய்க்கு பூஜைகள் நடத்துவது வழக்கம். பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் பூஜை நடத்துவார்கள்.

இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கையொட்டி அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் நீராடும் இடங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!