திருச்சி மாவட்டத்தில் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சைகள்

திருச்சி மாவட்டத்தில் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சைகள்
X

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சைகள் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி, வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் 4-வது நாளான நேற்று அ.தி.மு.க. சார்பில் திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தலைமை கழகம் சார்பில் வெளியிட்டனர். இதர கட்சியினர் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று திருச்சி மாநகராட்சியில் 10 பேரும் நகராட்சிகளில் 19 பேரும் பேரூராட்சிகளில் 23 பேர் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 52 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே நான்கு பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!