திருச்சி 12-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல்

திருச்சி 12-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல்
X

திருச்சி மாநகராட்சி 12வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேலசிந்தாமணி, கீழசிந்தாமணி, வி.என்.நகர், பாலகிருஷ்ணன் நகர், சஞ்சய் காந்திநகர், நடுத்தெரு, மாதுளங்கொள்ளை அக்ரஹாரம், கொசமேட்டுத்தெரு, கோரிமேட்டுத்தெரு, சு.சு.கோவில், ஓடத்துறை உள்ளிட்ட கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை உள்ளடக்கியது 12-வது வார்டு. இந்த வார்டில் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன் போட்டியிடுகிறார்.

வார்டு முழுவதும் பிரபலமான இவர் மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை வார்டுகளில் வழங்கி மக்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!