திருச்சியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேக்கம்- பொதுமக்கள் அவதி

திருச்சியில் பெய்து வரும் கனமழையால் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் பல இடங்களிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நேற்று காலை துவங்கி இன்று காலை 7.30 மணி வரை திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் வருமாறு:-

கல்லக்குடி 14.20, மி.மீட்டர், லால்குடி 21.40, மி.மீட்டர், நந்தியார் தலைப்பு 24.40, மி.மீட்டர், புள்ளம்பாடி -13.40 மி.மீட்டர்,தேவிமங்கலம் 26, மி.மீட்டர், சமயபுரம் 35.40,மி.மீட்டர், சிறுகுடி 24,மி.மீட்டர், வத்தலை 27.60,மி.மீட்டர்,மணப்பாறை 14.20,மி.மீட்டர், மருங்காபுரி-10.20,மி.மீட்டர், முசிறி 9.30,மி.மீட்டர், புலிவலம் 12,மி.மீட்டர்,நவலூர் குட்டப்பட்டு 32,மி.மீட்டர், துவாக்குடி 40,மி.மீட்டர், கொப்பம்பட்டி1,மி.மீட்டர், துறையூர் 4,மி.மீட்டர்,பொன்மலை 40.40, மி.மீட்டர், ஏர்போர்ட் 32,மி.மீட்டர்,ரயில்வே ஜங்சன் 48,மி.மீட்டர், திருச்சி டவுன் ௪௯ மி.மீட்டர், என மொத்தமாக 505.50 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. 21 மி.மீ சராசரி ஆகும்.

திருச்சியில் இன்று காலை கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திருச்சி குண்டூர், விமான நிலையம், உறையூர், சஞ்சீவிநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் மழை நீர் வெளியேற வழியின்றியும் தேங்கி நிற்கிறது. எனவே அந்தந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த மழை நீர் தேங்காமல் செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!