திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
X
திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, இ.பி.ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இ.பி.ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த காமராஜர் நகரைச் சேர்ந்த கதிரேசன் (வயது 19) என்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், திருச்சி பாபு ரோடு பகுதியில், ஒரு திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்றதாக, கமலா நேரு நகரைச் சேர்ந்த பாக்கியராஜ் (வயது 26) என்ற வாலிபரையும், போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு