ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதி உதவி

ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதி உதவி
X

திருச்சியில் ஆடு திருடர்களை பிடிக்க சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டார். அவரின் குடும்பத்துக்கு போலீசார் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருச்சியில் ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கடந்த மாதம் ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் பூமிநாதன் குடும்பத்தாருக்கு அவருடன் பயிற்சி எடுத்த 1995 திருச்சி PRS சார்பில், இன்று 25-12-2021 ந்தேதி சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில் திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் அவர்கள் முன்னிலையில் பூமிநாதனின் மனைவி, மகனிடம் (குடும்பத்தாருக்கு) ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையை திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!