திருச்சியில் எஃப்.சி. உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எஃப்.சி. உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
X
திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியில் எஃப்.சி. கட்டண உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் இன்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

அநியாயமாக உயர்த்தப்பட்ட எஃப்.சி. கட்டணத்தை திரும்ப பெறவேண்டும், 15 வருட பழைய ஆட்டோவிற்கு பத்து மடங்கு எஃப்.சி கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெறவேண்டும். சட்டவிரோதமாக இங்கும் பைக் டாக்சிக்கு தடை விதிக்கவேண்டும்,ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் மணிகண்டன், சம்பத் ஆகியோர் கோரிக்ககைளை விளக்கி பேசினார்கள். இதில் ஏராளமான ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!