மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டம்
X

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அங்கு வந்திருந்த விவசாய சங்கத் தலைவர்கள் திடீரென கூட்டம் நடந்த அரங்கை விட்டு வெளியேறி கலெக்டர் அலுவலக வாயில் முன்பாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் அய்யாகண்ணு( தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்), விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்) மற்றும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை, துரைராஜ் உள்பட அனைத்து விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா