கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு

கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு
X

கலெக்டர் சிவராசு.

கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று, என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் கிஸான் கடன் அட்டைகள் வழங்க, நிலையான இயக்க செயல்முறைகள், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, அவர்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஸான் கடன் அட்டைகள் வழங்க, கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் 15-2-2022-வரை பெறப்படவுள்ளது.

அதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கிஸான் அட்டைகள் பெற, உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், வருகின்ற 15-2-2022-க்குள் அளிக்க வேண்டும் என, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story