திருச்சி மாநகராட்சி 14-வது வார்டில் நாய் தொல்லையால் மக்கள் அவதி

திருச்சி மாநகராட்சி 14-வது வார்டில் நாய் தொல்லையால் மக்கள் அவதி
X
திருச்சி மாநகராட்சி 14-வது வார்டு பூக்கொல்லை, கிருஷ்ணாபுரம் பகுதியில் நாய் தொல்லையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி 14-வது வார்டு பூக்கொல்லை தெரு, கிருஷ்ணாபுரம், அலங்கநாதபுரம், வீரமாநகரம் ஆகிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவே பெரிதும் அச்சப்படுகின்றனர்.

தெருவில் விளையாடிய ஒரு குழந்தையை நாய்கள் கடித்துவிட்டது. ஆங்காங்கே குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூட பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இந்த தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையில் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!