திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வேட்பு மனு தாக்கல்

திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வேட்பு மனு தாக்கல்
X

திருச்சி மாநகராட்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ரா. புஷ்பராஜ் தேர்தல் அதிகாரி செல்வபாலாஜியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளராக வட்ட செயலாளர் ரா. புஷ்பராஜ் அறிவிக்கப்பட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் புஷ்பராஜ் தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என். நேருவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் தனது வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் பணியை தொடங்கினார்.

கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் கோட்ட உதவி ஆணையர் செல்வபாலாஜியிடம் புஷ்பராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்பட கழக நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!