தே.மு.தி.க நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் ஐக்கியம்

தே.மு.தி.க நிர்வாகிகள்  ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் ஐக்கியம்
X
திருச்சி தே.மு.தி.க. நிர்வாகிகள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.
திருச்சி தே.மு.தி.க. மாநில இளைஞர் அணி மற்ற்றும் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க .தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால், மாநில மாணவர் அணிச் செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார் ஆகியோர் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

தே.மு.தி.க. திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் எம்.நூர்முகமது, மருங்காபுரி ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய செயலாளர் வி.சரவணன் (எ)பொன்னையா, ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சி.சந்திரலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஏ.எம்.அருண்பிரசாத், மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர்கள் ஜி.மோகன், பி.பரமசிவம், மணப்பாறை நகர வழக்கறிஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஜெயகாளிமுத்து, கலிங்கப்பட்டி 3-வது வார்டு எஸ்.சத்திய சிவசக்திவேல் ஆகியோரும் இன்று தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்