தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
X

திருச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் தொடர்மழை பொய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல், பெய்து வரும் அடை மழை பகல் 4 மணி நேரம் பெய்யாமல் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துணிமணிகள் வாங்க வந்த பொதுமக்கள் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் குவிந்துள்ளனர்.

குறிப்பாக திருச்சி தெப்பக்குளம் சின்னக்கடை வீதி, சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி ரோட்டில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.திருச்சி தெப்பக்குளம், பெரியகடைவீதி,சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி ரோட்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநகர் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 1700-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!