சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் மிதந்ததால் பரபரப்பு

சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் மிதந்ததால் பரபரப்பு
X

குப்பம்மாள்

திருச்சி அருகே, சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 98). அந்த பகுதியில் தனியாக வசித்து வந்த இவர், காலையில் இருந்து நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினரை, அவரை தேட தொடங்கினர். அப்போது, குப்பம்மாள் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விசாரணையில், கிணற்றில் மிதப்பது மூதாட்டி குப்பம்மாள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டடது. நிலைய அலுவலர் மெல்க்யூ ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மூதாட்டியின் உடலை கயிற்றின் உதவியுடன் மீட்டனர். திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மூதாட்டி, கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கத்தில் கிணற்றி தள்ளி விட்டார்களா என்று பல கோணங்களில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!