நுகர்வோர் உரிமை தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

நுகர்வோர் உரிமை தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
X

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் சிவராசு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நுகர்வோர் உரிமை தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பரிசு வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் சிவராசு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.ஆர். சுப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி