'அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு விரைவில் வெளியிடப்படும்'- அண்ணாமலை

அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு விரைவில் வெளியிடப்படும்- அண்ணாமலை
X

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

‘அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு விரைவில் வெளியிடப்படும்’-என்று அண்ணாமலை திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பா.ஜ.க செய்யும் போராட்டம் எந்த மதத்துக்கும் எதிரான போராட்டமல்ல.மத அரசியலுக்கு பா.ஜ.க. வில் இடமில்லை.மாணவி மரணத்தை கட்சிகள் அரசியலாக்கி விட்டன. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்ற கூடாது.

காவல் துறையினர் தொடர்ந்து அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். அவர்கள் எந்த வித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக பணியாற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும்.இறந்த மாணவியின் அடையாளத்தை வெளியிட்டது சட்டப்படி சரி தான். அதில் தவறில்லை. அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் தான் அவரின் அடையாளத்தை வெளியிட்டோம்.நகர்புற உள்ளாட்சி தேர்தல் இட பங்கீட்டில் பா.ஜ.க வுக்கும் பாதகம் இல்லாமல் அ.தி.மு.க.வுக்கும் பாதகம் இல்லாமல் ஒரு முடிவை எடுப்போம். விரைவில் அதை அறிவிப்போம் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!