திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள்  விழிப்புணர்வு பிரச்சாரம்
X

விலைவாசி உயர்வுக்கு எதிராக திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

பெட்ரோல்-டீசல், கேஸ், சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர். சரவணன் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர்.

அப்போது திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள சின்னக்கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இந்நிகழ்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன், மலைக்கோட்டை முரளி, முன்னாள் மாவட்டத் தலைவர் தொட்டியம் சரவணன் வர்த்தகப் பிரிவு தலைவர் சிந்தாமணி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!