கேரளாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம் திருச்சி வருகை

கேரளாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம் திருச்சி வருகை
X

பைல் படம்

விவசாய பயன்பாட்டுக்காக, சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம், திருச்சிக்கு வந்து சேர்ந்தது.

திருச்சி மாவட்டத்திற்கு, விவசாய பயன்பாட்டிற்காக, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 1,317 டன் அமோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம், 21 வேகன்களில் சரக்கு ரயில் மூலம், திருச்சிக்கு வந்தது.

திருச்சி குட்ஷெட் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த உர மூட்டைகளை, அதிகாரிகள் மேற்பார்வையில் தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!