தி.மு.க.வுடன் கூட்டணி முறிவு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து போட்டி

தி.மு.க.வுடன் கூட்டணி முறிவு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து போட்டி
X
திருச்சி தெற்கு மாவட்ட  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் செயலாளர் ஹபீபுர் ரகுமான் தலைமையில் நடந்தது.
திமுகவுடன் கூட்டணி முறிந்ததால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து போட்டி யிட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து போட்டி என திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் 02.02.2022 புதன்கிழமையான இன்று மாலை பாலக்கரை, காஜா கடைசந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் வி.எம். பாரூக், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி உமர் பாரூக், மாநில எம்.எஸ்.எப். பொதுச் செயலாளர் அன்சர் அலி, தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம்.ஹூமாயூன், தெற்கு யூத் லீக் மாவட்ட தலைவர் அஜிம், தெற்கு யூத் லீக் மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்கள்.

கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இரண்டு வார்டுகள் கேட்டார்கள். அதேபோல் தி.மு.க. கூட்டணியில் பல முறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. அதிலும் இரண்டு வார்டுகள் கேட்கப்பட்டது. ஆனால் கேட்ட வார்டுகளை தி.மு.க. கொடுக்க வில்லை. ஆகையால் வருகிற திருச்சி மாநகராட்சி மற்றும் தெற்கு மாவட்டத்தில் தேர்தலில் எந்தவித உடன்பாடுகள் ஏற்பட வில்லை. ஆகையால் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக திருச்சி மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!