திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை புரியும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 25.03.22-ம்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜி. கார்னர் வேகத்தடை அருகே நடந்து சென்ற நபரிடம் செல்போனை பறித்ததாக பெறப்பட்ட புகாரின் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆந்தை (எ) வினோத்குமார் (வயது22)என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ஆந்தை (எ) வினோத்குமார் மீது திருச்சி மாநகரில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய வழக்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 14.05.22-ம்தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னூர் பகுதியில் வசித்து வரும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்ததாக சிறுவனின் தாய் கொடுத்த புகாரின்போpல் பிரபு (39)என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஆந்தை (எ) வினோத்குமார் மற்றும் பிரபு ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கத்தியை காண்பித்து செல்போன் மற்றும் பணம் பறிப்பதும், இருசக்கர வாகனத்தை திருடுபவா்கள் என விசாரணையில் தெரிய வருவதால், அவர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் தடுப்பு சட்டம் ஆணை இன்று சார்வு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu