தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி

தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி
X
டிபன்கடையில் தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார் திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணவேணி.
திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சி 13வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார்.

வார்டு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வரும் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி இன்று ஆண்டார் வீதி பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.


வடக்கு ஆண்டார் தெருவில் சிவசக்தி டவர்சில் நாகநாதர் கோவில் பணியாளர்களிடம் தனக்கு ஆதரவளிக்கும் படி ஓட்டு கேட்டார். அப்போது 13வது வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சுந்தர் பாலு, அசோக் வெற்றி, ஸ்ரீதர் ஜோதி ராஜா, கார்த்திக், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் தாமரை செல்வன் உள்பட பலர் சென்று இருந்தனர்.

வாக்கு சேகரிப்பு பணியின்போது ஒரு டிபன் கடைக்குள் சென்ற வேட்பாளர் கிருஷ்ணவேணி தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார். அவரது இந்த நூதன பிரச்சாரம் அங்கு இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!