திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க வின் 50-வது பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. அதற்காக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் இன்று திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய தினம் அ.தி.மு.க. கட்சியானது தொடங்கி 50- ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.எங்களின் வாழ்நாள் முழுவதும் அ.தி.மு.க.வில் தொண்டு செய்வதையே நாங்கள் கடமையாக வைத்திருக்கிறோம். மேலும் நல்லாட்சி கொடுப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.அதைத்தொடர்ந்து இனி வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தமிழகத்தை தன்னுடைய கோட்டையாக மாற்றிக் காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும், சிந்தாமணியில் உள்ள அண்ணாசிலைக்கும் மாலையணிவித்து மரியாதை செய்தனர்.பின்னர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஆங்காங்கே நிர்வாகிகள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு மரியாதை செய்து கட்சி கொடியை ஏற்றினார்கள். அதே போல அனைத்து பகுதிகளிலும் 50 அடி உயரத்தில் கொடி ஏற்றுவதற்கான பணிகளை தொடங்கினர்.
இதில் ஜவகர்லால்நேரு உட்பட மாநகர, பகுதி, வட்ட, அனைத்து அணி நிர்வாகிகள், மகளிரணி, தகவல் தொழில் நுட்பட அணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu