திருச்சி கருமண்டபத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

திருச்சி கருமண்டபத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு
X
திருச்சி கருமண்டபத்தில் சாமி கும்பிட்டு விட்டு நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி அசோக் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 59). இவர் சம்பவத்தன்று மாலை திருச்சி திண்டுக்கல் சாலை கருமண்டபத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார்.

தொடர்ந்து சாமி கும்பிட்டு விட்டு பின்னர், மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற மர்ம ஆசாமி, விஜயா கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அரசு நிலத்தில் கட்டுமானம், மரம் வெட்டும் சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ..!