5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள்.

மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதனையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சா பொட்டலங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.

பின்னர் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தபோது 5 கிலோ இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், பிரசாந்த் என்பது தெரிய வந்தது. பிரசாந்த் மற்றும் மணிகண்டன் மீது ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பிய ஓடிய இருவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags

Next Story
ai in future agriculture