திருச்சியில் விவசாயிகள் 17-வது நாள் நடத்திய நூதன போராட்டத்தால் பரபரப்பு

திருச்சியில் விவசாயிகள் 17-வது நாள் நடத்திய நூதன போராட்டத்தால் பரபரப்பு
X

திருச்சியில் விவசாயிகள் அஸ்தி கலசம், மாலையுடன் நூதன போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் 17-வது நாள் விவசாயிகள் நடத்திய நூதன போராட்டத்தை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்தர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் கரூர் பைபாஸ், மலர் சாலையில் தொடங்கி நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் வித விதமான போராட்டம் நடத்திய விவசாயிகள் பதினேழாவது நாளான இன்று காவிரி கரையில் அஸ்தி கரைக்க செல்வதாக கூறி விட்டு அஸ்தி கலசம் மாலையுடன் புறப்பட்டனர். இந்த நூதன போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவிலலை. அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா