திருச்சி மாநகரில் தேர்தல் காரணமாக 15 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

திருச்சி மாநகரில் தேர்தல் காரணமாக 15 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
X
திருச்சி மாநகரில் தேர்தல் காரணமாக 15 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாநகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக 15 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் கோட்டை சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

திருச்சி பி.டி.டி.எஸ்., இன்ஸ்பெக்டர் நீலகண்டன், கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மாநகர போலீசுக்கு புதிதாக வந்த தனசேகரன் பொன்மலை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சி.சிஆர்.பி., சேரன் கண்டோன்மெண்ட் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு ராஜேந்திரன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லைநகர் காவல் நிலையம் மணிராஜ், உறையூர் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சைபர் கிரைமில் இருந்த சிந்துநதி, தில்லைநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பொன்மைலை நிக்சன், மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளார்.

கண்டோன்மெண்ட் சிவக்குமார், பி.டி.டி.எஸ்., இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளார்.

கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சைபர் கிரைம் செல் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டை சட்டம், ஒழுங்கு தயாளன், ஐ.எஸ்., செக்யூரிட்டி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பரணிதரன் எடமலைப்பட்டி புதூர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

உறையூர் சட்டம், ஒழுங்கு சண்முகவேல் சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளார்.

மாநகர நுண்ணறிவு பிரிவு வனிதா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

உறையூர் குற்றப்பிரிவு முருகவேல் சி.சி.ஆர்.பி., இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவானது தேர்தல் நடைபெற உள்ளதால் உடனடியாக அமுலுக்கு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!