திருச்சியில் புகாரை வாங்க மறுத்த எஸ்.ஐ; விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸ் எஸ்.பி

திருச்சியில் புகாரை வாங்க மறுத்த  எஸ்.ஐ; விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸ் எஸ்.பி
X

திருச்சி போலீஸ் எஸ்பி மூர்த்தி

திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகாரை வாங்க மறுத்தார். எஸ்பி மூர்த்தி உடனடியாக பாதிக்கப்பட்ட நபரின் புகாருக்கு நடவடிக்கை எடுத்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் பயன்படுத்திய தொலைபேசி கடந்த 6 மாதத்திற்கு முன் பழுதடைந்தது. இதையடுத்து துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள இளங்கோவன் என்பவரது கடையில் பழுதை சரிசெய்ய கொடுத்தார்.த

சில நாள் கழித்து போனை திருப்பி வாங்க சென்றுள்ளார். அப்போது ரேவதியின் செல்போன் வேறொரு நபருக்கு விற்று விட்டதாக கூறி கடையின் உரிமையாளர் இளங்கோவன் ரேவதிக்கு வேறு ஒரு போனை தந்திருக்கிறார். அதை வாங்கி சென்று உபயோகப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த செல்போனும் தற்போது அடிக்கடி பழுதடைந்து வந்தது.

இதையடுத்து கடையின் உரிமையாளர் இளங்கோவனை மீண்டும் தொடர்புகொண்ட ரேவதிக்கு சரியான பதில் ஏதும் தராமல் அலைக்கழித்து வந்திருக்கிறார்.

இதையடுத்து ரேவதி துறையூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்து எஸ்.ஐ இதற்கெல்லாம் நாங்கள் என்ன செய்வது என்று கூறி புகாரை வாங்க மறுத்து இருக்கிறார்.

இதையடுத்து ரேவதி அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு நடந்ததை கூறியிருக்கிறார்.மேலும் திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தியின் தொலைபேசி எண்ணையும் பெற்றிருக்கிறார். பிறகு மாவட்ட எஸ்.பி.மூர்த்தியை தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறி யிருக்கிறார். எஸ்.பி. நடந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டு உங்கள் வீடு தேடி வந்து புகார்களை பெறுவார்கள் என்று கூறி இருக்கிறார்.

இப்படி சிறிது நேரத்தில் எஸ்.ஐ.மற்றும் மற்றொரு காவலர் இருவரும் ரேவதியின் வீட்டிற்கு சென்று புகாரைப் பெற்றிருக்கின்றனர். மேலும் அந்த செல்போனுக்காக மூன்றாயிரம் ரூபாய் பணத்தையும் கடையின் உரிமையாளரிடமிருந்து பெற்று தந்துவுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்திருக்கிறது என்றால் பணியில் உள்ள காவலர்கள் அதற்குரிய சிஎஸ்ஆர் (மனு ரசீது) பதிவு செய்து தர வேண்டும். பிறகு விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். ஆனால் காவல் நிலையங்களில் சிஎஸ்ஆர் பெறுவதே மிகவும் சிரமமாக இருக்கிறது என்று எளிய மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!