உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

உப்பிலியபுரம் அருகே டி முருங்கப்பட்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்புசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகில் உள்ள மலை அடிவாரப் பகுதியில் விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமித்து மாந்திரீக பூஜை செய்து வரும் மந்திரவாதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உப்பிலியபுரம் அருகே டி முருங்கை ட்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார்.

இதில் திருச்சி புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் பழனிசாமி தளுகை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி வீரமலை உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!