வறுமை காரணமாக குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டதில் ஒருவர் பலி

வறுமை காரணமாக குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டதில் ஒருவர் பலி
X

பலியான சுப்பிரமணி மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருக்கும் அவருடைய குழந்தைகள்.

வறுமை காரணமாக குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டதில் கணவர் பலியாகி மனைவி மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

திருச்சி மாவட்டம், துறையூர் சண்முகா நகரை சேர்ந்தவர் சுப்ரமணி (40) . இவர் சென்னையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் எவ்வித வேலையும் இல்லாமல் துறையூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி கமலா (34) . இவர்களுக்கு சஞ்சனா (9) சகானா (4) ஆகிய இரு மகள்களுடன் கஷ்ட சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார்.

குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானமில்லாததால் குடும்பம் வறுமையில் வாடியது. இந்நிலையில் இன்று காலை குடும்பத்தில் உள்ள அனைவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளனர். இதனால் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணி இறந்து விட்டார். மனைவி மாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!