மழையால் பாதிப்பு- திருச்சி அரியமங்கலத்தில் பாம்பு தொல்லை

மழையால் பாதிக்கப்பட்ட திருச்சி அரியமங்கலத்தில் பாம்பு தொல்லை இருப்பதாக மக்கள் புகார் கூறி வருகிறார்கள்

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஜோதி நகர், பவள நகர், சிற்பிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது.

இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அச்சுறுத்தலால் பெதுமக்கள் மிகுந்த பயத்தில் வாழ்ந்து வருகின்றதாகவும்,

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!