திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க சோழமாதேவி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க சோழமாதேவி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சோழமாதேவி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது சோழமாதேவி கிராம ஊராட்சி.இந்த ஊராட்சியானது திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

சோழமாதேவி கிராமத்தை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 3,500 பேர் வசித்து வருகிறோம். ஆயிரம் ஏக்கர் அளவில் விவசாய நிலம் உள்ளது. எங்கள் கிராம மக்கள் அனைவரும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறோம். இதனை நம்பியுள்ள எங்களுக்கு மாநகராட்சியுடன் இணைத்தால் அந்த வேலை பறிபோகும். ஆகவே எங்கள் பகுதியை இணைக்க கூடாது என்றனர்.

கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நபர்கள் சென்று இதுகுறித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!