திருவெறும்பூர் அருகே ஏ.டி.எம் கொள்ளை முயற்சி

திருவெறும்பூர் அருகே ஏ.டி.எம் கொள்ளை முயற்சி
X

கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம்

திருச்சி திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் உள்ள இந்தியன் வங்கி ஏ டி. எம் மில்.கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் துப்பாக்கி தொழிற்சாலை இந்தியன் வங்கி கிளையின் ஏ.டி.எம் அமைத்துள்ளது. இதிலுள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்கு அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி வங்கி மேலாளருக்கு மொபைல் மூலம் தகவல் வரவே, அவர் உடனடியாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரை கண்டதும் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பெயரில் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!