திருச்சி பொன்மலைப்பட்டி வாலிபர் கொலையில் 3 பேர் கைது

திருச்சி  பொன்மலைப்பட்டி வாலிபர் கொலையில் 3 பேர் கைது
X
கொலை செய்யப்பட்ட சின்ராஜ்
திருச்சி பொன்மலைப்பட்டி வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த 15-ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொன்மலை போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் சில நபர்களை இரண்டு நாட்களாக விசாரித்து வந்த நிலையில் பொன்மலை போலீசார் பொன்மலை கணேசபுரம் ஆர்ச் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பொன்மலை பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ், மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதியை சேர்ந்த சரத் என்கிற ரத்தினசாமி, காஜாமலை பகுதியை சேர்ந்த ஆல்வின் என்பதும், இந்தக் கொலையில் ஈடுபட்டது இந்த மூன்று பேர்தான் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

உடனடியாக அவர்களை கைது செய்து பொன்மலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தில் இறந்துபோன சின்ராஜின் அண்ணன் ரமேஷ்க்கும் அலெக்ஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அலெக்ஸ் என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சின்ராஜ் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

மீண்டும் சின்ராஜ் என் வீட்டில் வந்து என் அண்ணனிடம் எப்படி தகராறு செய்தாய் என்று அலெக்ஸ் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இந்த பிரச்சனை சம்பந்தமாக சின்ராஜ், அலெக்ஸ் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் இதனை அறிந்த அலெக்ஸ், சரத், ஆல்வின் ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாகவும் போலீசாரிடம் கூறினர்

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்