திருச்சியில் அனைத்து குளங்களும் சீரமைக்கப்பட்டு நீர் நிரப்பப்படும் : அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி திருவானைக்காவல் ராமர் தீர்த்த குளத்தில் நீர் நிரப்பும் பணியை துவக்கிவைத்த அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவானைக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் ராமதீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்தில் தற்போது இருக்கக்கூடிய தண்ணீரை வெளியேற்றி விட்டு காவிரியில் தண்ணீர் வரும்போது நேரடியாக இதில் நீர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
இந்த கோரிக்கை ஏற்று 42 ஆயிரத்து 350 கன மீட்டர் கொள்ளளவுள்ள இந்த குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து மலட்டாறு வழியாக குளத்திற்கு நீர் நிரப்பும் வகையில் குழாய்கள் மறுசீரமைக்கப்பட்ட இன்று முதல் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இன்று குளத்தை நேரில் பார்வையிட்டு அதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தண்ணீரை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
திருச்சியில் தற்போது திருவானைக்கோவில் எப்படி சீரமைக்கப்பட்டது அதேபோல ஸ்ரீரங்கம் தெப்பக்குளமும், மலைக்கோட்டை தெப்பக்குளமும் விரைவில் சீரமைக்கப்பட்டு புதிய நீரேற்று நிலையம் தெப்பக்குளத்திற்கு என்று அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட குளங்களை முழுமையாக சீரமைக்கப்பட்டு அனைத்து குளங்களிலும் நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக எடமலைப்பட்டிபுதூரில் உள்ள நான்கிற்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளும்,
மிளகுபாறை பகுதியில் உள்ள 11 ஏக்கர் பரப்பிலான குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிய மிளகுபாறை பகுதியில் உள்ள குளத்தை பராமரிப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
குளங்களை சீர்அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காகவே எனவே விரைவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் சீரமைத்து நீர் ஏற்றி பராமரிக்கப்படும் என்று உறுதி அளித்தார்....
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார்.ஸ்ரீரங்கம் பழனியாண்டி, மணச்சநல்லூர் கதிரவன் ,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மாநகரச் செயலாளர் அன்பழகன் ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu