ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.94லட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவில் உண்டியல் வருவாய்  ரூ.94லட்சம்
X

ஸ்ரீ ரங்கம் கோவிலில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் வருவாயாக ரூ.94.5 லட்சம் கிடைத்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.94.5 லட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்பத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் வழக்கமான உண்டியல்களில் ரூ. 89 லட்சத்து 13 ஆயிரத்து 913-ம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அர்ச்சுன மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சொர்க்கவாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக உண்டியலில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 210 -ம் என மொத்தம் ரூ.94 லட்சத்து 66 ஆயிரத்து 123 ரொக்கமும், 165 கிராம் தங்கமும், 1,164 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!